திருப்பூரில் காலியாக உள்ள 126 தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு!

 
nurse

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 126 தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் வினித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்  நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், 126 செவிலியர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் (Contractual Staff Nurse)தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 30.01.2023 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. 

பதவியின் பெயர் : செவிலியர் (Staff Nurse), பணியிடங்களின் எண்ணிக்கை - 126, வயது வரம்பு : 50 வயது வரை, தகுதி : இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியம் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம் முடித்திருக்க வேண்டும்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : நிர்வாக செயலாளர்/துணை இயக்குனர், சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், 147, பூலுவப்பட்டி பிரிவு, நெருப்பெரிச்சல் ரோடு, திருப்பூர் - 641 602, தொலைபேசி எண் 0421 2478503

jobs

நிபந்தனைகள் :

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. 
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தம் செய்யப்படமாட்டாது. 
3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும். 

குறிப்பு :

1.விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in/notice category/recruitement என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்கள் இணைத்து மாவட்ட நலவாழ்வு சங்கம், திருப்பூர் அலுவலகத்தில் 30.01.2023 அன்று மாலை, 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
 
2.மேற்குறிப்பிட்ட காலி பணியிடங்கள் தோராயமானதாகும். மேலும், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டதாகும், இவ்வாறு ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார்.