மாவட்ட வள பயிற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - நாமக்கல் ஆட்சியர்!

 
namakkal

நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படும் அரசு திட்டம். இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், மோகனுர், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய 4 வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்வட்டாரங்களில் அமைக்கப்படும் சமுதாய பண்ணை பள்ளிகளை வலுப்படுத்தும் விதமாக (கால்நடை பராமரிப்பு)  மாவட்ட அளவிலான வள பயிற்றுநர் (District Resource Person) நியமிக்கப்பட உள்ளனர். 

Image

மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு கால்நடை பராமரிப்பு தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்புடைய துறையில் 10 வருடங்கள்  முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.  தொடர்புடைய மாவட்டத்தை சேர்ந்தவராக அல்லது இம்மாவட்டத்தில் குடியேறியவராக இருத்தல் வேண்டும். மதிப்பு சங்கிலி ஒருங்கிணைத்தல் மற்றும் பால் பொருட்களை மேம்படுத்துவதில் போதிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கிராம புறங்களில் உள்ள மக்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆர்வமுள்ளவராக இருத்தல் வேண்டும். சர்வதேச நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், சிவில் சொசைட்டிகளில் பணிபுரிபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு ஒரு நாளுக்கான மதிப்பூதியமாக ரூ.2,000 மற்றும் உள்ளுர் போக்குவரத்துக்காக ரூ.250 வழங்கப்படும். மாவட்ட வள பயிற்றுநருக்கான பணி ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும். மேற்படி, பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை 30.7.2022 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.