தேனி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
theni collector

தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெயிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Co -Ordinator) பணிக்கு முற்றிலும் தற்காலிகமாக மாதம் ரூ.12,000 /- தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, இப்பணியிடத்திற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் கணினியில் 3 மாத கால சான்றிதழ் (MS Office) கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். 01.10.2022 அன்று 35 வயதுக்குள் இருத்தல் வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் இடியிருப்பவராக இருக்க வேண்டும்.

jobs

இப்பணியிடத்திற்கான விண்ணப்பங்களை திட்ட இயக்குநர் / இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த அலுவலக வளாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தரைதளம் (அலுவலக தொலைபேசி எண் - 04546 255203) தேனி மாவட்டம் என்ற முகவரியில் நேரில் வழங்கிட வேண்டும்.

விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்- 25.01.2023 மாலை 5.30 மணிக்குள். இதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது மற்றும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மகளிர் திட்ட அலுவலகத்தில் பணி நாட்களில் ம்லை 6 மணிக்குள் விபரங்களை பெற்று பயனடையுமாறு, ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.