அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - புதுக்கோட்டை ஆட்சியர்!

 
doctors

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது- புதுக்கோட்டை துணை இயக்குநர் சுகாதரப்பணிகள் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கொடும்பாளூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள ஒரு பல் மருத்துவர் பணியிடத்திற்கும், இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலலப்பணிகள் புதுக்கோட்டை அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஒரு பல் மருத்துவர் பணியிடத்திற்கும் தகுதி வாய்ந்த மற்றும் முன் அனுபவம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

தற்காலிக ஒப்பந்த காலிப் பணியிடங்களின் விபரம்- பல் மருத்துவர் (Dental Surgeon) மொத்த காலி பணியிடங்கள் - 2, கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.D.S பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு பல் மருத்துவக்குழுவில் பதிவு செய்திருக்க வேண்டும். (Tamil Nadu Dental Council Registration), முன் அனுபவம் குறைந்தது 1 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். (Minimum 1 Year Experience), ஒப்பந்த ஊதியமாக மாதந்தோறும் ரூ.34,000 வழங்கப்படும். தகுதியான வயது விண்ணப்பதாரரின் வயது 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

pudukottai

பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant)மொத்த காலி பணியிடம் - 1, கல்வித்தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.(S.S.L.C Pass) முன் அனுபவம் குறைந்தது 1 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் (Minimum 1 Year Experience).ஒப்பந்த ஊதியமாக மாதந்தோறும் ரூ.13,800 வழங்கப்படும். தகுதியான வயது விண்ணப்பதாரரின் வயது 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. பல் மருத்துவருக்கு மாத ஊதியம் ரூ.34,000, பல் மருத்துவ உதவியாளருக்கு மாத ஊதியம் ரூ.13,800 வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில் , மதுரை ரோடு, புதுக்கோட்டை - 622 001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.01.2023 அன்று மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

jobs

மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பம் நேரிலோ / அல்லது விரைவு தபால் (Speed Post) வழியாகவோ வரவேற்கப்படுகின்றன. மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களிலும் பெற்று கொள்ளலாம். https://pudukkottai.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.