திருப்பூர் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
tirupur Gh

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள 31 லேப் டெக்னிசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் சார்பில் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அரசு ஆணை எண்.61/ H&FW(E2) Dept, நாள் - 05.02.2021-ன் படி புதியதாக தோற்றுவிக்கப்பட்ட ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 (Lab, Technician Grade-II) - 31 பணியிடங்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் ( Consolidated Pay) மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் 25.11.2022 மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.

jobs

பதவியின் பெயர் : ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 (Lab, Technician Grade-II); பணியிடங்களின் எண்ணிக்கை - 31 ; கல்வித்தகுதி : மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் படிப்பு - DMLT(2ஆண்டுகள்), King Institute of Prevention Medicine அல்லது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்று பெற்று கல்வித் தகுதியுடையவர்கள். நிபந்தனைகள் : இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. வயது வரம்பு 18 வயது முதல் 59 வயது வரை. பணியில் சேர்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் படிவம் (Under Taking) அளிக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : முதல்வர், அரசு மருத்துவக் கல்லுரி, திருப்பூர் மாவட்டம் - 641608.

விண்ணப்பங்களின் உறையின் மீன் ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 தொகுப்பூதிய பணியிட விண்ணப்பம் என கட்டாயம் குறிப்பிடவும். விண்ணப்பங்கள் நேரிலும், தபால் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் வரவேற்கப்படுகின்றன. மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்களின் Hard Copy கட்டாயமாக நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பப்பட வேண்டும். மின்னஞ்சல் முகவரி (E-Mail Id) - mesectiongmctpr@gmail.com . விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் அனுபவ சான்று இணைக்கப்பட வேண்டும். ஆய்வுக்கூட நுட்புநர் நிலை - 2 பதவிக்கு விண்ணப்பிக்கும், விண்ணப்பதாரர்களுக்கு கல்லூரி அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.