புதுக்கோட்டை மாவட்டத்தில் 114 தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 
nurse

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் காலியாக உள்ள 114 தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற மற்றும் கிராமபுறங்களில் உள்ள அரசு நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 114 செவிலியர்கள் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் நிரப்பப்பட உள்ளது. அப்பணியிடங்களுக்கான நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை 622 001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தற்காலிக ஒப்பந்த செவிலியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி செவிலியர் பட்டயப்படிப்பு (Diploma in GNM) அல்லது / இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு Nursing council-லில் பதிவு செய்திருக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் அரசு மருத்துவக்கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திருந்தால் அதற்கான முன் அனுபவச்சான்று முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவர்களிடமும், அரசு மருத்துவமனைகள் / தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திருந்தால் முன் அனுபவச்சான்று இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களிடமும் சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில்  கொரோனா பணிகளில்  பணிபுரிந்திருந்தால் துணை இயக்குநர், சுகாதார பணிகள் அவர்களிடமும் முன் அனுபவச் சான்று கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும். மேற்கண்ட செவிலியர்களுக்கு ஒப்பந்த மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும்.

pudukottai

இப்பணியிடங்களில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ்  முற்றிலும் தற்காலிகமானது. மேலும், பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை 622 001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2023 அன்று மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பம் https://pudukkottai.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. இப்பணியிடங்கள் இனசுழற்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.