மைசூரில் இருந்து மயிலாடுதுறை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 
special train

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து மயிலாடுதுறை மற்றும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், வண்டி எண்.06251 மைசூரு - மயிலாடுதுறை சிறப்பு ரயில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 18ஆம் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மைசூரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3.30 மணிக்கு மயிலாடுதுறையை வந்தடையும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06252  மயிலாடுதுறை - மைசூர் சிறப்பு ரயில் வரும் 29ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறையில் சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 12 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரயில் ஒசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழயாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

mayiladuthurai

இதேபோல், மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு  தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, வண்டி எண். 06253 மைசூர் - துத்துக்குடி சிறப்பு ரயில் நவம்பர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில் மைசூரில் இருந்து வெள்ளிக்கிழமை பகல் 12.05-க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06254 தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் நவம்பர் 5, 12, 19 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8.30 மணிக்கு மைசூரை வந்தடையும்.