பெருந்துறையில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா... முன்னாள் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் பங்கேற்பு

 
admk

அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி பெருந்துறையில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான பொன்னுத்துரை, முன்னாள் எம்எல்ஏக்கள் கே.எஸ்.பழனிசாமி, பொன்னுசாமி ஆகியோர் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து,  பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். 

admk

இந்த நிகழ்ச்சியில்,  முன்னாள் அவைத்தலைவர் ஜெகதீஷ், எம்ஜிஆர் மன்ற தலைவர் ஏகே சாமிநாதன், மாவட்ட இணைச் செயலாளர் மைனாவதி கந்தசாமி, மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி, பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி, எம்ஜிஆர் மன்றம் திங்களூர் எஸ் கந்தசாமி, ஒன்றிய சேர்மன்சாந்தி ஜெயராஜ்,  ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி கே செல்வராஜ், விஜயன் என்கிற ராமசாமி,  வைகை தம்பி என்கிற ரஞ்சித்ராஜ்,  ராம்ஸ் என்கிற ராமசாமி, சி.டி. ரவிச்சந்திரன்,  தனசேகரன், சக்திவேல், பேரூர் செயலாளர்கள் கே எம் பழனிச்சாமி, கல்யாண சுந்தரம், துரைசாமி, கமலக்கண்ணன்,  சிவசுப்பிரமணியம், பூபால கிருஷ்ணன், எஸ். சரன் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.