அண்ணா பிறந்த நாள் விழா - ஈரோட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மரியாதை!

 
erode

ஈரோட்டில் அண்ணா பிறந்தநாளையொட்டி திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் மாவட்ட அவைத்தலைவர் குமார் முருகேஷ் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கந்தசாமி முன்னிலையில் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவகுமார், நெசவாளரணி செயலாளர் சச்சிதானந்தம், கொள்கை பரப்பு இணை செயலாளர் சந்திரக்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார், செல்லப்பொன்னி, மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி, மாநகராட்சி மேயர் நாகரத்தினம், தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மணி ராசு, பகுதி செயலாளர் அக்னி சந்துரு, ராமச்சந்திரன், மணிகண்டராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

erode

இதேபோல், ஈரோடு வீரப்பன்சத்திரம் மண்டல அலுவலகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு, மாநகர செயலாளர் சுப்பிரமணி, முன்னாள் கவுன்சிலர் நடராஜன் தலைமையில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெருந்துறை ஒன்றியத்தில் நடந்த நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் சண்முகம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூர் செயலாளர் திருமூர்த்தி, பேரூராட்சி தலைவர் செல்வன், துணை தலைவா் சக்திகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மதிமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் தென்னரசு, பாலகிருஷ்ணன், முன்னாள் எம்பி செல்வக்குமார சின்னையன், மாவட்ட அவைத்தலைவர் ராமசாமி, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், பெரியார் நகர் பகுதி செயலாளர் மனோகரன், பகுதி அவை தலைவர் மீன்ராஜா என்ற ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் சோழா ஆசைத்தம்பி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அதிமுக மாணவரணி இணை செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.