திருவண்ணாமலை கோயிலில் நவ.7-இல் அன்னாபிஷேகம் : பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து!

 
tiruvannamalai

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வரும் 7ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வரும் நவம்பர் 7, 8  ஆகிய தேதிகளில் பௌர்ணமி வர இருப்பதால், நவம்பர்  7ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுவதால் அன்று பிற்பகல் 3 மணிமுதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

tvm

மேற்படி தினத்தன்று அதிகளவில் பக்தர்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும் வரும் நவம்பர் 7, 8 ஆகிய 2 நாட்களுக்கு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேற்படி பௌர்ணமி தினத்தன்று எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, தெரிவிக்கப்பட்டு உள்ளது.