கோவை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பலி!

 
accident

கோவை மாவட்டம்  கே.ஜி.சாவடி பகுதியில் நெடுஞ்சாலையோரம் ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை மாவட்டம் மதுக்கரை படேல் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மனைவி மரகதம் (72). இவர் கோவை கே.ஜி. சாவடி காந்தி நகர் அருகே வசித்து வருகிறார். மேலும், தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று கே.ஜி.சாவடி அருகே உள்ள கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை ஓரம் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அவர் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, வாளையாரில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் மரகதம் மீது அதிவேகமாக மோதியது.

dead

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.ஜி.சாவடி போலீசார், விபத்தில் பலியான மரகதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் திண்டுக்கல்லை சேர்ந்த சுகுமார் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.