5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோவில் கைது!

 
pocso

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல்(57). கூலி தொழிலாளி. கடந்த சில நாட்களுக்கு அவரது வீட்டின் அருகே 5 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது, தங்கவேல், சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

arrest

அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில் முதியவர் தங்கவேல், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை அடுத்து, மகளிர் போலீசார் தங்கவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து,அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.