ஓமலூர் அருகே கிணற்றில் மூழ்கி முதியவர் பலி!

 
drowning

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மேல்காமாண்டப்பட்டி அணைக்காடு பகுதியை சின்னு கவுண்டர்(62). விவசாயி. இவர் நேற்று கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றிருந்தார். அங்கு கிணற்றில் இருந்த திட்டில் அமர்ந்து, அவர் குளித்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் தவறி விழுந்த சின்னு கவுண்டர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

omalur

இது குறித்து ஒமலூர் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது, சின்னு கவுண்டர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து, ஓமலூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த்னர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரிதது வருகின்றனர்.