ஆரல்வாய்மொழி அருகே அரசுப் பேருந்து மோதி முதியவர் பலி!

 
kumari

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே அரசுப் பேருந்து மோதியதில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி சேர்ந்தவர் முதியவர் மகாராஜன். இவர் கடந்த 4ஆம் தேதி இரவு 10.20 மணி அளவில் ஆரல்வாய்மொழி அருகே நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற மகாராஜன் மீது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற அரசுப்பேருந்து மோதியது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்டதில் அவர் பலத்த காயமடைந்தார். அப்போது, பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்த நடத்துனர், முதியவர் மகாராஜன் மயங்கி கிடப்பதை பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

accident

சிறிது நேரத்திற்கு பின் சாலையில் முதியவர் அடிப்பட்டு கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை முதியவர் மகாராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் குறித்து விசாரித்து வருகின்றனர்.