பவானி அருகே வாய்க்காலில் குதித்து முதியவர் தற்கொலை!

 
drowned

ஈரோடு மாவட்டம் பவானி அருகே முதியவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள பெரிய புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது முதியவர் பெருமாள். இவர் தனது மகன் கிரண்குமாருடன் வசித்து வந்தார். பெருமாள் முழங்கால் வலி மற்றும் ஆஸ்துமா பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டபோதும் சரியாக வில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 27ஆம் தேதி வீட்டின் அருகில் உள்ள சாளையில் வளர்த்து வரும் கோழிகளை கவனித்துக் கொள்வதற்காக பெருமாள் சென்றுள்ளார். அன்று மாலை அவரை அழைத்துச்செல்ல கிரண்குமார் வந்தபோது, பெருமாளை காணவில்லை என கூறப்படுகிறது.

erode gh

இதனால் அதிர்ச்சியடைந்த கிரண்குமார், பல்வேறு இடங்களில் தேடி வந்தார். எனினும் பெருமாளை காணவில்லை. இந்த நிலையில், நேற்று காஞ்சிகோவில் அடுத்த முள்ளம்பட்டி பாலம் அருகே வடபுற வாய்க்காலில் பெருமாளின் உடல் மிதந்து சென்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கிரண்குமார், காஞ்சிகோவில் போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் பெருமாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் ஆஸ்துமா உள்ளிட்ட உடல் உபாதைகள் காரணமாக பெருமாள் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.