நாகர்கோவில் டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் பலி!

 
kumari

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டீக்கடையில் சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தில் கீழ் செயல்பட்டு வரும் டீக்கடையில் கடந்த கடந்த 17ஆம் தேதி அன்று சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

kumari gh

மேலும், இந்த தீ விபத்து குறித்து வடசேரி போலீசார் கடை ஊழியர் மூசா என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் தீ விபத்தில், டீக்கடையின் அருகே டயர் கடை நடத்தி வந்த பறக்கை பகுதியை சேர்ந்த சசிதரன்(63) என்பவர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த மற்ற 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.