பாலியல் புகாரில் சிக்கியதால் வேதனை... அரசுப்பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் பாலியல் புகாரில் சிக்கிய அரசுப்பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இரவது மனைவி லில்லி(33). இவர் உப்பிலியபுரம் அடுத்துள்ள நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியை ஆக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு பிள்ளைகள் இல்லை. இந்த நிலையில், நெட்டவேலம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஆசிரியர் மோகன்தஸ் என்பவர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியை லில்லி மீதும் முசிறி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன் காரணமாக லில்லி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

dead body

இந்த நிலையில், நேற்று மண்ணச்சநல்லூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த ஆசிரியை லில்லி, அங்கு யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலின் பேரில் மணச்சநல்ர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து லில்லியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.