ஆடித் திருவாதிரை விழா - கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் ஆட்சியர் ரமண சரஸ்வதி ஆய்வு!

 
ariyalur

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஆடித்திருவாதிரை விழா முன்னேற்பாடுகளை, மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை நாள், தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனை அடுத்து, அவரது ஆட்சியின் தலைநகராக திகழ்ந்த அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் வரும் 26ஆம் தேதி ஆடித் திருவாதிரை விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவையொட்டி கோயிலில் மேடை, பந்தல், அலங்கார மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

ariyalur

இந்த நிலையில், விழா ஏற்பாடுகளை நேற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். அப்போது, கோவிலில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்றும் பக்தர்கள் அமரும் இடம், பக்தர்கள் செல்வதற்கான பேருந்து வழித்தடங்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து,  பணிகளை விரைந்து முடித்திட்ட சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார். ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தாசில்தார் ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.