ஆடி 18, வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்... அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் அறிவிப்பு!

 
BUS

ஆடி 18 மற்றும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் ஆக.2, 3 ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது

இதுதொடர்பாக, அரசுப் போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி கூறியதாவது :- வரும் ஆக.3 ஆம் தேதி அன்று ஆடி 18 மற்றும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் மூலமாக சிறப்பு பேருந்துகள் ஆக.2 முதல் ஆக.33 வரை சேலத்தில் இருந்து மேட்டூர், பவானி, காந்தாசிரமம், பேளுர், காரவள்ளி, கொல்லிமலை பகுதிகளுக்கும், நாமக்கல்லிலிருந்து கொல்லிமலை, அரப்பளீஸ்வரர் கோவில்,  வேலூர் - கொடுமுடி,  மோகனூர் பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது.

salem

இதேபோல், திருச்செங்கோட்டில் இருந்து கொமுடி, பவானி பகுதிகளுக்கும், சங்ககிரியில் இருந்து பவானிக்கும், ராசிபுரத்தில் இருந்து காரவள்ளி, கொல்லிமலை பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது. மேலும், காரவள்ளியில் இருந்து அரப்பளீஸ்வரர் கோவிலுக்கும், எடப்பாடியில் இருந்து மேட்டூர், பூலாம்பட்டி, கல்வடங்கம் பகுதிகளுக்கும், தாரமங்கலத்தில் இருந்து மேட்டூர் ஆகிய வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஆக.2 முதல் ஆக.3  வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளதால், பயணிகள் அனைவரும் பயண நெரிலை தவிர்த்து இனிய பயணம் செய்திடும்படி  கேட்டுக்கொள்ளப்படுகிறது, இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.