மின்கட்டண உயர்வை கண்டித்து ஈரோட்டில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

 
admk

மின்கட்டண உயர்வை கண்டித்து ஈரோட்டில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து அதிமுக சார்பில் இன்று மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன்படி, ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பவானி - அந்தியூர் பிரிவில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், பவானி தொகுதி எம்எல்ஏமான கே.சி.கருப்பணன் தலைமை தாங்கினார்.

admk

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, மின் கட்டணத்தை உயர்த்தியத்திற்கு எதிர்ப்பு தெரித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.  மேலும், திமுக அரசை கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.