ஈரோட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

 
erode

ஈரோட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் தலைமையில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.  

தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக சார்பில் நேற்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். அதன் பேரில், ஈரோட்டில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று  சூரம்பட்டி நான்குரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்தார்.  மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ். தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

admk

முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் வீரக்குமார், முன்னாள் எம்.பி. செல்வகுமார சின்னையன்,  பெரியார் பகுதி அவைத் தலைவர் மின் ராஜா, மாநகர பிரதிநிதி சூரிசேகர், ஒன்றிய செயலாளர்கள் பூவேந்திர குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மின்கட்டண உயர்வை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.