ஈரோட்டில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்!

 
admk

எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 4 நாட்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், கழக அமைப்பு செயல்பட்டு கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள். 

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுக் கூட்டங்களில் பேசுபவர் விவரம் வருமாறு:- ஈரோடு மேற்கு தொகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில், புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான, கே. ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், நடிகர் காதல் சுகுமார், கோவை பலகுரல் தாமு ஆகியோர் கலந்துகொண்டு பேசிவார்கள். பவானி தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே. சி.கருப்பணன் எம்.எல்.ஏ, திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகருமான சி. ஆர். சி. ரங்கநாதன், பி.ஏ. சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். 

edappadi palanisamy

கோபிசெட்டிபாளையம் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் எம். எல்.ஏ, நடிகர் வையாபுரி, குன்னூர் ஆர். விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். அந்தியூர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் செய்தி தொடர்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மகேஸ்வரி, கோவை அழகு, திருப்பூர் டி.ஏ. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.வும், தேர்தல் பிரிவு துணைச் செயலாளருமான இன்பத்துரை, குன்னூர் ஆர். விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். 

மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான திருப்பூர் சிவசாமி, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயரும், மகளிர் அணி மாவட்ட செயலாளருமான மல்லிகா பரமசிவம், சிட்கோ சீனு ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். பெருந்துறை பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சருர் கே.சி.கருப்பணன் எம். எல். ஏ, அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எல்.ஏ. எஸ். ஜெயக்குமார், புதூர் மணி, என். கோபாலன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும்போது கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளரும், எம்எல்ஏவுமான பண்ணாரி, சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் அப்துல் ஜப்பார், முன்னாள் எம்.எல்.ஏ. பூவைசெழியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்