பெருந்துறையில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்... முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன், எம்எல்ஏ ஜெயக்குமார் பங்கேற்பு!

 
kckaruppanan

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன், எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர் 

பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட சீனாபுரம் அடுத்த ஆயிக்கவுண்டன் பாளையத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ் தலைமை வகித்தார். பெருந்துறை பேரூராட்சி செயலாளர் வி.பி. கல்யாணசுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரருமான கே.சி.கருப்பணன் சிறப்புரை அற்றினார். இக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளர்கள் டி.கே.துரைசாமி, திருப்பூர் சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். 

இந்த கூட்டத்தில் பெருந்துறை எம்எல்ஏவும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான எஸ். ஜெயக்குமார் பேசிய போது, பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதல்வர் தவறான தகவலை வெளியிட்டது நியாயம் தானா? என்று கேள்வி எழுப்பினார்.  கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கும், அத்திக்கடவு -அவினாசி திட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாமலேயே, அதை அதிமுக முடக்கி வைத்துள்ளதாக கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

admk

கடந்த 5 மாதத்திற்கு முன் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துவிட்டு, தற்போது இந்த திட்டம் முடக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதை நாங்கள் விரைவில் முடிப்போம் என்று கூறியது வேடிக்கையாக உள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும், வரும் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பெருந்துறை அதிமுகவின் கோட்டை என நிரூபித்து, எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர, அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தின் வாயிலாக உறுதி கூறுவதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில் எம்எல்ஏ  ஜெயக்குமார் தனது சொந்த நிதியிலிருந்து 2 மாணவிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கினார்.