அதிமுக பொன்விழா ஆண்டு - துடுப்பதியில் கட்சிக்கொடியை ஏற்றிவைத்த பெருந்துறை எம்எல்ஏ!

 
admk

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட துடுப்பதியில் கட்சிக் கொடியை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் ஏற்றிவைத்தார்.

அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதி முழுவதும் உள்ள கிராமங்களில், அதிமுக கட்சி கொடி ஏற்றப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்று துடுப்பதி ஊராட்சி, துடுப்பதி பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு, அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பெருந்துறை ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன் என்கிற கே. ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.

admk flag

இதில் மாவட்ட பொருளாளர் கேபிஎஸ் மணி, துடுப்பதி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்பரசு, மாணவர் அணி சுள்ளிபாளையம் விஸ்வநாதன், பால் சதீஷ், கேபிள் கண்ணன், கயிறு வாரிய கூட்டுறவு சங்க தலைவர் முத்துசாமி, முன்னாள் கவுன்சிலர் ஜோதிமணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் குருசாமி,  கிளைச் செயலாளர்கள் நடராஜ், ஓ.எம். பெரியசாமி, சந்துரு, பழனி, நாச்சிமுத்து, பிரகாஷ், கார்த்தி, சுள்ளிப்பாளையம், வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.