பெருந்துறையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்; முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்பு!

 
kc karuppanan

பெருந்துறையில் அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து நாளை நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. 

மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்கை கண்டித்து ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பவானி - அந்தியூர் பிரிவில் நாளை கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம், நேற்று பெருந்துறை எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் மருத்துவர் பொன்னுசாமி, கே.எஸ்.பழனிசாமி, கே.சி.பொன்னுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

அப்போது, அதிமுக சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாததை கண்டித்து நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், இதில் கட்சியினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அப்போது, பெருந்துறை சட்டமன்ற தொகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஆர்ப்பரிப்போடு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என முன்னாள் அமைச்சரிடம், எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் உறுதி அளித்தார்.

kck

இந்த கூட்டத்தில், பெருந்துறை யூனியன் சேர்மன் சாந்தி ஜெயராஜ், பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் கே ராமசாமி, ஊத்துக்குளி மேற்கு செயலாளர்  சி.டி. ரவிச்சந்திரன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ், பெருந்துறை வடக்கு ஒன்றிய செயலாளர் வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ், சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் ராம்ஸ் என்கிற ராமசாமி, ஊத்துக்குளி வடக்கு ஒன்றிய செயலாளர் தனசேகர், ஊத்துக்குளி தெற்கு ஒன்றிய செயலாளர் கே.சக்திவேல், பேரூர் செயலாளர்கள் கருமாண்டி செல்லிபாளையம் கே.எம்.பழனிச்சாமி, பெருந்துறை கல்யாண சுந்தரம், ஊத்துக்குளி வி.கே. சின்னசாமி, நல்லாம்பட்டி துரைசாமி, பள்ளபாளையம் கமலக்கண்ணன், பெத்தாம்பாளையம் கே.எஸ். பூபாலகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் மைனாவதி கந்தசாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி, மாவட்ட பொருளாளர் கே.பி.எஸ். மணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், சார்பு அணி ஒன்றிய  செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.