பெருந்துறை இந்தியன் ஆயில் நிறுவனத்தில் விபத்தில் பலியான ஒப்பந்த பணியாளருக்கு இழப்பீடு வழங்க அதிமுக கோரிக்கை!

 
appavu

பெருந்துறை சிப்காட் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஒப்பந்த பணியாளருக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி அதிமுக எம்எல்ஏ-க்கள் எஸ்.ஜெயக்குமார் மற்றும் ஏ.பி.ஜெய்சங்கர் ஆகியோர் சபாநாயகரை அப்பாவுவிடம் கடிதம் வழங்கினர். 

சேலம் மாவட்டம் ஆத்தூர்  மேல் தொம்பை பகுதியை சேர்ந்த ஒப்பந்த சரவணன். மலைவாழ் மக்கள் சமூகத்தை சேர்ந்த இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு 7.50 மணி அளவில் சரவணன் சிலிண்டர் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். சிலிண்டரை நிரப்பி வெளியே எடுக்கும்போது சிலிண்டரின் மேல் பகுதி விடுபட்டு கேஸ் அழுத்தத்தால் சிலிண்டர் அவருடைய நெஞ்சில் மோதி சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

appavu

திருமணம் ஆகாத சரவணன், தனது உழைப்பின் மூலம் தாய் தந்தையரை காப்பாற்றி வந்துள்ளார். இதனால் ஒப்பந்த பணியாளர் சரவணன் குடும்பத்திற்கு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவிடம், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் மற்றும் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.பி.ஜெய்சங்கரன் ஆகியோர் சபாநாயகர் மூலமாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.