பெருந்துறை அரசுப்பள்ளியில் விழிப்புணர்வு கருத்தரங்கை துவங்கி வைத்த அதிமுக எம்எல்ஏ!

 
peru

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கை அதிமுக எம்எல்ஏ எஸ். ஜெயக்குமார் துவங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜேசிஐ பெருந்துறை எலைட், இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் பெருந்துறை கல்வி அறக்கட்டளை இணைந்து மாணவ - மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகலாமா ? என்னும் தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தினர். இக்கருத்தரங்கில் பெருந்துறை கல்வி அறக்கட்டளையின் தலைவர் பல்லவி பரமசிவன் வரவேற்று பேசினார். மெய்ஞான வாழ்வியல் வழிகாட்டி  ஸ்ரீ சசிக்குமார் முன்னிலை வகித்தார். இதில் பெருந்துறை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான எஸ். ஜெயக்குமார் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.

peru

இந்த நிகழ்ச்சியில், பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் கல்யாணசுந்தரம், தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், ஜேசிஐ பெருந்துறை எலைட்டின் தலைவர் கலைவாணி, செயலாளர் பிரபா, மாவட்ட செயலாளர் கேபிஎஸ் மணி, எம்ஜிஆர் மன்றம் அப்புகுட்டி, விவசாய பிரிவு சாமிநாதன், வர்த்தக அணி ராஜேந்திரன், இளைஞர் பாசறை பிரபாகரன், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.