பெருந்துறை ஒன்றிய பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அதிமுக எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார்!

 
peru

பெருந்துறை அடுத்த பொன்முடி ஊராட்சியில் அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த பொன்முடி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேலுன் 39 -வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று பொன்முடி ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் நலத் திட்டப் பணிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருந்துறை எம்எல்ஏவும், சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் உறுப்பினருமான எஸ்.ஜெயக்குமார் கலந்து கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.  அதன்படி, புதுப்பாளையம், பொன்முடி ஏ.டி.காலனி, வலசுப்பாளையம், வடக்குப்பாளையம், சாய்நகர், பொன்முடி, இச்சிக்காட்டூர், புட்டங்காட்டூர் ஆகிய இடங்களில் குடிநீர் தொட்டி, வடிகால் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. மேலும், பணிகள் முடிந்த குடிநீர் தொட்டிகளில் பொதுமக்கள் உபயோகத்திற்காக தண்ணீர் விநியோகம் தொடங்கப்பட்டது. 

peru

மேலும், மரக்கன்றுகள் நடுதல், பொன்முடி ஆரம்ப பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை துவக்கப்பட்டதோடு, அங்கு கல்வி பயிலும் 9 மாணவ -மாணவிகளுக்கு தலா ரூ.2,000  கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து, பொன்முடி அரிஜன காலனியில், அந்த பகுதி மக்களோடு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இதில் எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார், பொன்முடி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல், அவைத் தலைவர் சந்திரசேகர், ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி கே செல்வராஜ், பொருளாளர் கேபிஎஸ் மணி, ஹிட்டாச்சி பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில், பெருந்துறை ஒன்றிய துணை சேர்மன் உமா மகேஸ்வரன், ஒன்றியகுழு உறுப்பினர் செந்தில்குமார், விஜயபுரி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், கம்பளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், துடுப்பதி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்பரசு, நெசவாளர் அணி பொன்னுசாமி, பொன்முடி சக்திவேல், இளைஞர் பாசறை ரவிக்குமார், பிரபாகரன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.