அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் ஈரோடு வருகை... தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

 
edappadi

ஈரோட்டில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பெருந்துறை எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று ஈரோட்டில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு சாலை மார்க்கமாக சென்றார். பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற அவருக்கு அதிமுக எம்எல்ஏவும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான எஸ்.ஜெயக்குமார் தலைமையில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

eps

இந்த நிகழ்வின்போது, அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்னுசாமி, முன்னாள் அவைத் தலைவர் டிடி ஜெகதீஷ், பெருந்துறை ஒன்றிய சேர்மன் சாந்தி ஜெயராஜ், ஒன்றிய செயலாளர்கள் அருள்ஜோதி கே செல்வராஜ், ரஞ்சித் ராஜ், ரவிச்சந்திரன், தனசேகர், ராமசாமி, சக்திவேல்,  இணை செயலாளர் மைனாவதி கந்தசாமி, பொருளாளர் கேபிஎஸ் மணி, எம்.ஜியார் மன்றம் திங்களூர் கந்தசாமி, பேரூர் செயலாளர்கள் கல்யாண சுந்தரம், வேட்டுவபாளையம் அருணாச்சலம், சரண் பிரபு, பூபாலகிருஷ்ணன், மாணவரணி மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி, விவசாய அணி சாமிநாதன், அம்மா பேரவை சம்பத்குமார், காடபாளையம் கோபால், வர்த்தக அணி கருப்பட்டி ராஜேந்திரன், ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்