பெருந்துறையில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்... முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பங்கேற்பு!

 
perundurai

பெருந்துறையில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன், எம்எல்ஏ எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் பெருந்துறை ஜே.கே டிரேடர்ஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பெருந்துறை சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளருமான எஸ்.ஜெயக்குமார் தலைமை விகித்தார். முன்னாள் எம்எல்ஏ பொன்னுச்சாமி, மாவட்ட அவை தலைவர் பொன்னுத்துரை, முன்னாள் அவை தலைவர் ஜெகதீஷ், அவைத் தலைவர் பொன்முடி சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

perun

இதில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான கே.சி. கருப்பணன் கலந்துகொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவும், கிராமங்களில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து மனுக்கள் பெறுவது குறித்தும், அதற்கு உண்டான குழு அமைப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில், அனைத்து ஒன்றிய செயலாளர்களிடமும்  வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் பெருந்துறை அருள்ஜோதி செல்வராஜ், பெருந்துறை விஜயன் என்கிற ராமசாமி, பெருந்துறை ரஞ்சித் ராஜ் என்கிற வைகை தம்பி, சென்னிமலை ராம்ஸ் என்கிற ராமசாமி, ஊத்துக்குளி  சிடி ரவிச்சந்திரன், ஊத்துக்குளி தனசேகரன், ஊத்துக்குளி கே.கே.சக்திவேல், பேரூராட்சி செயலாளர்கள் கருமாண்டி செல்லிபாளையம் கேஎம் பழனிச்சாமி, நல்லாம்பட்டி துரைசாமி, காஞ்சிக்கோயில் சிவசுப்பிரமணியம், பள்ளபாளையம் கமலக்கண்ணன், பெத்தம்பாளையம் பூபாலகிருஷ்ணன், ஊத்துக்குளி விகே சின்னசாமி, குன்னத்தூர் சரண் பிரபு, பொருளாளர் கேபிஎஸ் மணி, எம்ஜிஆர் மன்றம் அப்புகுட்டி, மகளிரணி உமா நல்லசாமி, மாணவரணி மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.