திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை... முசிறி அருகே சோகம்!

 
dead

முசிறி அருகே திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த சூரம்பட்டியை சேர்ந்த கனகசுந்தரம். இவரது மகள் திவ்யா (21).  இவருக்கு, கடந்த 1 வருடத்திற்கு முன் நாமக்கல் மாவட்டம் குருவம்பட்டி பகுதியை சேர்ந்த பாலகுமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு பிறந்து 47 நாட்களான ஆண் குழந்தை உள்ளது.  இந்த நிலையில், பிரசவத்திற்கு பின்னர் திவ்யா சூரம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

suicide

வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய பெற்றோர் திவ்யா தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்த முசிறி காவல் நிலைய போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 1 வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.