ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி இளம்பெண் பலி!

 
alangudi

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளம்பெண் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டை பிரகதாம்பாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. விவசாயி. இவரது மகள் பிரியாங்கா (26). இவர் நேற்று மாலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில திடீரென பலத்த மழை பெய்தது. அப்போது, எதிர்பாராத விதமாக பிரியங்காவின் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

alangudi

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து புகாரின் அடிப்படையில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்னல் தாக்கி இளம்பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.