நெல்லை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... குடும்ப தகரறில் சோகம்!

 
suicide

நெல்லை அருகே திருமணமான சில ஆண்டுகளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நெல்லை அருகே உள்ள டக்கரம்மாள்புரம் ஜோதிபுரத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகள் சுபாஷினி(24). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுபாஷினி கணவரை பிரிந்து, தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மேலும், வாழ்க்கையில் விரக்தியடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு தனது அறைக்கு தூங்க சென்ற சுபாஷினி மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

nellai gh

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, சுபாஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலின் பேரில் முன்னீர்பள்ளம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சுபாஷினியின் தந்தை ராஜலிங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.