போடி அருகே விளக்கேற்றியபோது சேலையில் தீப்பற்றியதில் இளம்பெண் பலி!

 
fire accident

தேனி மாவட்டம் போடி அருகே பூஜை அறையில் விளக்கேற்றியபோது சேலையில் தீப்பற்றியில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கோடிபொம்மி நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி சபிதா. சம்பவத்தன்று சபிதா வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு சாமி கும்பட்டு கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. சிறிது நேரத்திற்குள் அவரது உடல் முழுவதும் தீ பரவியதால் சபிதா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

theni

இந்த தீ விபத்தில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சபிதா பரிதாபமாக உயிரிழந்தார். சபிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறி அவரது தந்தை காமராஜ், போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.