கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயம்!

 
leopard

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மாடு மேய்க்க சென்ற தொழிலாளியை சிறுத்தை தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கீழ் கோத்தகிரி பரவக்காடு பகுதியை  சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(48). விவசாயி. இவர் நேற்று காலை தனது வீட்டில் வளர்த்து வரும் மாடுகளை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு ஓட்டிச் சென்றார். அப்போது, புதரில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று, திடீரென பன்னீர்செல்வத்தை தாக்கியது. இதனால் அவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், ஓடிச்சென்று சிறுத்தையை விடிட்டினர்.

leopard

இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தொழிலாளியை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.