தஞ்சை அருகே மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலி!

 
dead

தஞ்சை அருகே இன்று காலை மழையில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அடுத்த நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகையன். கூலி தொழிலாளி. இவர் தனது மனைவி செல்ல பாப்பா (55) மற்றும் மகளுடன் மண்ணால் கட்டிய பழைய ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முருகையன் வீட்டின் சுவர் மழையில் நினைந்து  ஈரப்பதத்துடன் காணப்பட்டு வந்துள்ளது.

thanjavur gh

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு முருகையன், அவரது மனைவி செல்லப் பாப்பா மற்றும் அவரது மகள் ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கியுள்ளனர். இன்று காலை அந்த பகுதியில் கனமழையின் பெய்த நிலையில், திடீரென முருகையன் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த செல்ல பாப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

முருகன், அவரது மகள் காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த  பூதலூர் போலீசார், பலியான செல்ல பாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.