ஆசனூர் அருகே குட்டியுடன் சாலையை மறித்து நின்ற காட்டுயானையால் பரபரப்பு!

 
wild elephant

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் பகுதியில் குட்டியுடன் சாலையை மறித்து நின்ற காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானை, மான், கரடி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி அவ்வப்போது வனப்பகுதி வழியாக செல்லும் சத்தியமங்கலம் - மைசூர் நெஞ்சாலையில் உலா வருவது வழக்கம்.இந்த நிலையில், சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய காடடுயானை சாலையை மறித்து நின்றது.

elephant

இதனை கண்ட வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வானங்களை நிறுத்திவிட்டு யானை வனப்பகுதிக்குள் செல்வதற்காக காத்திருந்தனர்.  சாலையில் சிறுது நேரம் குட்டியுடன் உலாவிய அந்த யானை பின்னர் வனப் பகுதிக்குள் புறப்பட்டு சென்றது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓட்டிச்சென்றனர். இந்த சம்பவம் காரணமாக ஆசனூர் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.