குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்... நூலிழையில் உயிர் தப்பிய 2 பெண்கள்!

 
accident

குடியாத்தம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் நூலிழையில் 2 பெண்கள் உயிர் தப்பிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மேல் ஆலத்தூர் சாலையில் நேற்று 2 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது பின்னால் கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி  ஓன்று வந்தது. திடீரென அந்த லாரி சாலையின் இடதுபுறம் திரும்பியது. அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது லாரி சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பெண்களும் நூலிழையில் உயிர் தப்பினர். லாரி ஏறியதில் இருசக்கர வாகனம் முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது.

cctv

தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை மீட்டனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.