திருச்சியில் பைக் மீது லாரி மோதி விபத்து - இளைஞர் பலி!

 
dead

திருச்சியில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மான்பிடிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு பிரசன்னா (27) என்ற மகனும், மோனிகா (25) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று அண்ணன், தங்கை இருவரும் இருசக்கர வாகனத்தில் திருச்சி நகருக்கு சென்று கொண்டிருந்தனர். திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்து துக்கி வீசப்பட்ட பிரசன்னா பலத்த காயமடைந்தார்.

trichy gh

அவரை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசன்னா பரிதாபமாக உயிரிழந்தார். மோனிகா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலின் பேரில் திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், பிரசன்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து தந்தை சுப்பிரமணியன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.