தருமபுரி அருகே முன்விரோதத்தில் வியாபாரி கொலை - உறவினர் கைது!

 
murder

தருமபுரி அருகே முன் விரோதம் காரணமாக பேன்சி பொருட்கள் வியாபாரியை கத்தியால் குத்திக்கொன்ற உறவினரை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பொம்மிடி விடிவெள்ளி நகரில் வசித்து வருபவர் முனியப்பன். இவர் பேன்சி பொருட்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முனியப்பனின் மனைவி குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டுள்ளர். இதற்கு உறவினர் ஈஸ்வரன் தான் காரணம் என முனியப்பன் கருதியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மது போதையில் இருந்த முனியப்பன், ஈஸ்வரனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

dead body

அப்போது, வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது.  இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன், அருகில் கிடந்த கத்தியை எடுத்து முனியப்பனை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த பொம்மிடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று முனியப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொம்மிடி போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர்.