மின்கம்பத்தில் சாய்ந்து செல்போன் பேசிய வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயம்!

 
dead body

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மின் கம்பத்தில் சாய்ந்து செல்போன் பேசிய வாலிபர் மீது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள கருவாரூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(23). இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கடந்த 6 மாதங்களாக தங்கி, தறிப்பட்டறை ஒன்றில் கூலி தொழிலாளி ஆக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பணிமுடிந்து விஜயகுமார் இரவு 10.30 மணி அளவில் மொடக்குறிச்சி அருகே உள்ள கஸ்பா பேட்டை செங்கரை பாளையத்தில் சாலையோரம் உள்ள மின் கம்பம் மீது சாய்ந்து நின்றவாறு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

erode gh

இதில் விஜயகுமார் பலத்த அடைந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து விஜயகுமாருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம்  குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கம்பத்தின் மீது சாய்ந்து நின்ற இளைஞர் மீது மின்சாரம் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.