திருச்சியில் ஓடும் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

 
car fire

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் மேம்பாலத்தில் சென்ற திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று ஸ்விப்ட் கார் ஓன்று சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை எழுந்துள்ளது. இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு காரில் இருந்து வெளியேறினார். மேலும், காரில் அமர்ந்திருந்த 2 பயணிகளும் உடனடியாக காரில் இருந்து வெளியேறினர். சிறிது நேரத்திற்குள் காரில் தீப்பற்றிய நிலையில், காற்று பலமாக வீசியதால் கார் முழுவதும் தீ பரவியது. மேம்பாலத்தில் கார் பற்றி எரிவதை கண்டு அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

car fire

அதன் பேரில், திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடத்திற்குள் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்து கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.