தேனி மாவட்டத்தில் ஆக.5-ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்!

 
disabled

தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் (அ) மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலர்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம்.

theni collector

மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், 4 புகைப்படங்களுடன் நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்திட வேண்டும். எனவே, இச்சிறப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெற வேண்டும் என ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.