ஈரோடு அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் சாவு - போலீசார் விசாரணை!

 
suicide

ஈரோடு அருகே ரயிலில் அடிப்பட்டு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டில் இருந்து சாவடிபாளையம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக, ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு தலை சிதைந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவர் முகம் சிதைந்துள்ளதால், அவர் யார் என்றும், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

dead body

இதைத் தொடர்ந்து, இறந்த நபரின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.