முந்திரி பருப்பை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை பலி... துறையூர் அருகே சோகம்!

 
dead dead

துறையூர் அருகேயுள்ள பச்சைமலையில் முந்திரி பருப்பை விழுங்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை மூச்சித்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள பச்சைமலை எருமைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கலைராஜா(30). விவசாயி. இவரது மனைவி பேபி. இவர்களுக்கு நிதார்ஸ் ரக்ஷன் (4) மற்றும் ஒன்றரை வயதில் நிகில்தேவ் என 2 மகன்கள் உள்ளனர். கலைராஜா கோவையில் பணிபுரிந்து வரும் நிலையில், பேபி குழந்தைகளுடன் எருமைப்பட்டியில் வசித்து வந்தார்.  இந்த நிலையில், நேற்று  குழந்தைகள் நிதார்ஸ் ரக்ஷன்,  நிகில் தேவ் ஆகியோர் முந்திரி பழம் சாப்பிட்டு உள்ளனர்.  

thuraiyur

அப்போது, நிகில் தேவின் மூச்சுக்குழாயில் முந்திரி பருப்பு சிக்கியதால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது.இதனை அடுத்து, உறவினர்கள் குழந்தையை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நிகில் தேவ் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முந்திரி பருப்பை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.