உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்ற மினிடெம்போ திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

 
fire

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் சென்ற மினி டெம்போ திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பாண்டிச்சேரி சுல்தான்பட்டி பகுதியை சேர்ந்தவர் உபையதுல் ரகுமான் (30). மினி டெம்போ ஓட்டுநர்.  இவர் கள்ளக்குறிச்சியில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை - விருத்தாச்சலம் நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வந்தபோது மின் டெம்போவின் எஞ்சின் பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனை கவனித்த ஓட்டுநர் ரகுமான் உடனடியாக சாலையோரத்தில் டெம்போவை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்திற்குள் டெம்போ முழுவதும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

fire

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மினி டெம்போ முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தீ விபத்து காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.