நத்தத்தில் மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மெக்கானிக் பலி!

 
accident

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ராக்காச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி(44). இவர் நத்தம் மின்வாரிய அலுவலகம் அருகே இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு நத்தம் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டு விட்டு அழகர்சாமி, அவரது உறவினர் மாணிக்கம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ராக்காச்சிபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.  காந்திஜி கலையரங்கம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது அழகர்சாமியின் இருசக்கர வாகனம் மோதியது.

natham

இதில் வாகனத்துடன் நிலை தடுமாறி விழுந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த நத்தம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.