நெல்லையில் அரசுப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் கைது!

 
arrest

திருநெல்வேலி அருகே அரசுப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் துரை தலைமைதயிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சந்தேகத்திற்கு உரிய விதமாக இருசக்கர வாகனத்தில் நின்ற இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

cannabis

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர் பாளையங்கோட்டை நம்பிக்கை நகரை சேர்ந்த ராஜேந்திரன் (37) என்பதும், அவர் சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.