கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது அதிவேகமாக மோதிய லாரி... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
kappalur

மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் கோடை ஸ்கேன் செய்த ஊழியர் மீது காய்கறி லாரி மோதிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடிக்கு நேற்று அதிகாலை 3 மணி அளவில் காய்கறி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று வந்தது. அப்போது, வாகனத்தின் பாஸ்ட் டேக் சரிவர வேலை செய்யவில்லை என தெரிகிறது. இதனால் சுங்கச்சாவடி ஊழியர் தினேஷ் என்பவர் லாரியின் முன்னே சென்று, அதில் ஒட்டப்பட்டிருந்த பாஸ்ட் டேக் கோடை கருவியின் மூலம் ஸ்கேன் செய்து கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மற்றொரு லாரி, நின்றிருந்த காய்கறி லாரியின் பின்னால் அதிவேகமாக மோதியது.

 madurai

இதில் காய்கறி லாரி மோதியதில் தினேஷ் துக்கிவீசப்பட்டார். இதில் லேசான காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். இந்த நிலையில், சுங்கச்சாவடி ஊழியர் மீது லாரி மோதிய விபத்து குறித்த சிசிடிவிகாட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..