தனியார் பேருந்தில் ஒட்டப்பட்ட குதிரை ஸ்டிக்கர்... தாய் என நினைத்து பின்னால் ஓடிய குட்டிக் குதிரை!

 
cbe horse

கோவை பேரூர் பகுதியில் தனியார் பேருந்தில் ஒட்டியிருந்த குதிரைப்படத்தை கண்டு, குட்டிக்குதிரை ஒன்று பேருந்தை பின் தொடர்ந்து ஓடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தர்ப்பண மண்டம் பகுதியில் ஏராளமான குதிரைகள் சுற்றித் திரிந்து வருகின்றன. நேற்று பேரூர் பேருந்து நிலையம் அருகே காந்திரம் நோக்கி செல்லும் தனியார் பேருந்து நின்றிருந்ததது. அந்த பேருந்தில் குதிரை படம் ஒப்பட்டு இருந்தது. இதனை கண்ட அந்த பகுதியில் இருந்த குட்டி குதிரை ஒன்று, தனியார் பேருந்தின் அருகே சென்று குதிரை ஸ்டிக்கரை நீண்ட நேரமாக பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது, பேருந்தில் ஒப்பட்டிருந்த குதிரையை தனது தாய் என எண்ணிய அக்குட்டி குதிரை, குதிரை படத்தின் மீது தனது முகத்தை பதித்துக் கொண்டது.

cbe horse

அப்போது, ஓட்டுநர் பேருந்தை இயக்கிச் சென்றதால் அந்த குட்டிக்குதிரை, பேருந்தின் பின்னால் நீண்ட தொலைவிற்கு ஓடியது. இதனை கண்டு அந்த வழியாக சாலையில் சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டுகளும் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும், இதனை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.